புழல் ஜெயிலில் ராம்குமார் தற்கொலை

Admin

சென்னை: புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் ஜெயிலில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த கம்பியை பிடித்து  தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் இன்ஜினியர் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. சென்னையை உலுக்கிய இந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராம்குமார் போலீஸ் விசாரணைக்குப்பின் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் புழல் சிறையில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த கம்பியை கடித்து ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்கொலைகொலைக்கு முயன்ற ராம்குமார் தற்போது அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். புழல் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்றதால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் என்று தகவல் கூறுகின்றன.

ஆனால், ராம்குமார் சாப்பிட்ட உணவால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆகவே, சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுவதாக ராம்குமார் வக்கீல் கூறியுள்ளார்.ராம்குமார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராம்குமார் நெல்லையில் கைது செய்யப்படும் போது, தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிதம்பரத்தில் துப்பாக்கியை காட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

52 கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் உதவி- ஆய்வாளர் திரு.கண்ணுசாமி தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452