பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

Prakash

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரன் தேஜஸ்வி.IPS அவர்கள் உத்தரவின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், சிங்காரப்பேட்டை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. பழனிச்சாமி அவர்கள்மிட்டப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பெண் குழந்தைகள் குறித்து பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில் குழந்தை திருமணங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்பது பற்றியும், பெண்களுக்கு ஏற்படும் வரதட்சணை கொடுமைகள்,பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்து பெண்கள், பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகள் வைத்து ஏமாற்றும் நபர்கள் பற்றியும், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு செய்து, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு இலவச தொலைபேசி எண்கள் 181 மற்றும் 1098 தொடர்புகொண்டு புகாரினை தெரியப்படுத்தலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்த்தவர்கள் கைது. கஞ்சா செடிகள் பறிமுதல்

277 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 24.11.2021அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திபுரம் கிராம பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அஞ்செட்டி காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452