பெண்ணை அவதூறாக பேசி அடித்து மிரட்டல் விடுத்த இருவர் கைது.

Prakash

திருநெல்வேலி: தேவர்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வன்னிகோனந்தலை சேர்ந்த முத்துலெட்சுமி 40, என்பவரது மகளை அதே பகுதியை சேர்ந்த மணி செல்வம் 23, என்பவர் காதலித்து வந்ததாகவும் இதனை  அவரது தாயார் கண்டித்ததால்  இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

மேற்படி முத்துலட்சுமி அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது அங்கு வந்த மணிசெல்வம் மற்றும் அவரது நண்பரான தவமணி இருவரும் முத்துலட்சுமி வழிமறித்து அவதூறாகப் பேசி கையால் அடித்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முத்துலட்சுமி தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திரு.ரோச் அந்தோணி மைனர் ராஜ், அவர்கள் விசாரணை மேற்கொண்டு பெண்ணை தாக்கி மிரட்டல் விடுத்த இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அடிதடி மற்றும் கொலைமுயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

291 திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் எதிரியான திருநெல்வேலி வட்டம், சுத்தமல்லி பாரதி நகர் பிச்சாண்டி என்பவரின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!