பொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக, 1997ம் ஆண்டில், பணம் வைப்பீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்க தனிச்சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டில், பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவும் தொடங்கப்பட்டது. கூடுதல் காவல்துறை இயக்குநர் ஒருவரின் தலைமையில் இயங்கும் இப்பிரிவில் பின்வரும் அலகுகள் உள்ளன.eow

1)பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு – II (நிதி நிறுவனங்கள்) (EOW-Financial Institutions) :
வங்கிப் பணிசார நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மை தகுதி பெறாத நிதி நிறுவனங்களில் பொதுமக்களால் முதலீடு செய்யப்பட்ட வைப்புத் தொகையை அதன் முதிர்ச்சி காலத்திற்கு பின் பட்டுவாடா செய்யத் தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், காவல்துறையில் இப்பிரிவு அமைக்கப்பட்டது. 2007ம் ஆண்டில், ரூ118.28 கோடி வைப்புத்தொகை முதலீட்டார்களுக்கு பெற்றுத் தரப்பட்டது. இப்பிரிவு புலன் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட முக்கிய வழக்குகள்  பற்றி அவ்வப்போதைய தகவல்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஏப்ரல் 2007ல், கணினி மூலமான நேர்முகத் தகவல் பெறும் தனித்தளம் உருவாக்கப்பட்டது. மின்னஞ்சல் மூலம் புகார்கள் இதில் பெறப்பட்டு வருகின்றன.

2)வணிகக் குற்றங்கள் புலனாய்வுப் பிரிவு (Commercial Crime Investigation Wing – CCIW):
1971ம் ஆண்டில் இப்பிரிவு நிதி மோசடிக் குற்றங்களை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டது. மேலும் 7 உடகோட்டங்களுடன் அனைத்து மாவட்டங்களிலும் இப்பிரிவின் அலகுகள் உள்ளன கூட்டுறவுச் சங்கங்களில் நடக்கும் ரூ.1லட்சத்துக்கும் மேற்பட்ட நிதி கையாடல் வழக்குகளை இப்பிரிவு துவக்கப்பட்டதிலிருந்து 149 வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு 88 வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

3)சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு (Idol Wing):
முக்கியமானச் சிலைத்திருட்டு வழக்குகளில் புலன் விசாரணைப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடுவதுடன், ரூ.5லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள தொன்மை வாய்ந்த சிலை திருட்டு வழக்குகளையும், காவல்துறை தலைமை இயக்குநரால் ஒப்படைக்கப்படும் சிலை திருட்டு வழக்குகளையும் இப்பிரிவு புலனாய்வு செய்கிறது.


முகவரி:

சிட்கோ பழைய கார்ப்ரேட பில்டிங்
முதல் மாடி, கார்மெண்ட் காம்ளக்ஸ்2,
கிண்டி சென்னை – 600 032.

மின்னஞ்சல்::  www.tneow.gov.in

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami