போலி மதுபான ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

Prakash

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.வருண்குமார் ஐபி.எஸ். உத்தரவின்படி கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.வருண்குமார் ஐபிஎஸ் கள்ளச்சாராயம் மற்றும் போலி மது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இதனை தொடர்ந்து மதுவிலக்கு பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.அனுமந்தம் தலைமையில், பெரியபாளையம் காவல்நிலைய மதுவிலக்கு அமல்பிரிவு உதவி ஆய்வாளர் அதிரு.ருள்தாஸ், காவலர்கள் திரு.தீபராஜ், திரு.செந்தில்குமரன் பொதுமக்களுக்கு கள்ச்சாரயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும்,

போலி மதுபானங்களை அருந்துவதால் ஏற்படும் உடல்நல சீர்கேடுகள் குறித்தும், போதைக்காக இருமல் மருந்து, ரசாயன திரவங்களை குடிப்பதால் ஏற்படும் உயிர் ஆபத்துகள் குறித்தும் விளக்கினர்.

மேலும் நிகழ்வை ஒட்டி மாஸ்டர் திரு.ரூபன், திரு.வினாயகம் ஆகியோரின் கலைகுழு சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மது குறித்த வீதி நாடகம் நடத்தப்பட்டது.

பெரியபாளையம் பேருந்து நிலையம் முன்பு நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வில் திரளானோர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தவர் கைது

271 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் சரகத்தில் ரவி (எ) குமரேசன் என்பவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தவரை ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452