போலீஸ்காரர் உயிரிழப்பு

Prakash

சென்னை: தாம்பரத்தில் இருந்து  கடற்கரைக்கு வந்த மின்­சார ரெயிலில் இன்று காலை, மேலகோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும்  திரு.மோகன்  41 என்ற  ஆயுதப்படை காவலர்

பயணம் செய்தார்.அவர் சேத்துப்பட்டு  ரெயில்  நிலையத்தில், ரெயில் மெது­வாக வந்து கொண்டிருந்தபோது இறங்கினார். அப்போது தவறி கீழே விழுந்தார்.

உடனடியாக சென்னை அரசு மருத்துவ­ம­னைக்கு  அவரை ரெயில்வே ஊழியர்கள் கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே  திரு.மோகனின் உயிர் பிரிந்து விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  இந்த விபத்து காலை 8 மணியளவில் நடந்தது.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடத்தப்பட்ட தொழிலதிபரை 24 மணி நேரத்தில் மீட்ட திண்டுக்கல் போலீசார்

281 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுபட்டியை சேர்ந்த பெரியசாமி என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர்.இது தொடர்பாக எஸ்.பி திரு.சீனிவாசன் அதிரடி நடவடிக்கையில் […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!