போலீஸ் நியூஸ் சார்பாக மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ராணிப்பேட்டை எஸ்.பி யிடம் வழங்கப்பட்டது

Admin

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவலர்கள் நலன் கருதி மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தீபா சத்யன் தெரிவித்துள்ளார். கொரானா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் தமிழகம் முழுவதும் ஞாயிறு கிழமைகளில் தீவிர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தீபா சத்யன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு, காவலர்கள் பத்திரிகையாளர்கள் உட்பட அனைத்து முன் களப் பணியாளர்களுக்கு குளிர்பானம் வழங்கினார்.

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஒளிபரப்பு ஊடகப்பிரிவு தென்னிந்திய தலைவர் திரு.பாபு அவர்கள் நேற்று காவலர்கள் மாஸ்க், கிருமிநாசினி மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் ஆகியவற்றை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தீபா சத்தியன் அவர்களிடம் வழங்கினார்.


Leave a Reply

Your email address will not be published.

Next Post

DIG முனைவர்.Z.ஆனி விஜயா IPS அவர்களின் விழிப்புணர்வு வாழ்த்து மடல்

423 ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர்.Z.ஆனி விஜயா IPS அவர்களின் விழிப்புணர்வு வாழ்த்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452