மதுரை.கிரைம்ஸ்.25.11.2021.

Prakash

குடிக்க மது கேட்டு முதியவர் மீது தாக்குதல் வாலிபர் கைது.

மதுரை: ஐராவத நல்லலூரை சேர்ந்தவர் அர்ஜுனன் 66. அதே பகுதியை சேர்ந்தவர் பாண்டி மகன் அஜய் கண்ணன் 24. இவர் அர்ஜூனனிடம் மது வாங்கித்தரும்படி கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜய் கண்ணன் முதியவர் அர்ச்சனனை பலமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அர்ச்சுனன் கொடுத்த புகாரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜய்கண்ணனை கைது செய்தனர்.


முன்விரோதத்தில் ஒருவர் மீது தாக்குதல் வாலிபர் கைது.

மதுரை: மதுரை ஆத்திகுளம் அங்கையற்கண்ணி காலனியை சேர்ந்தவர் நாகூர் அனிபா 45. இருக்கும் சின்ன சொக்கிகுளம் அண்ணாநகரைச் சேர்ந்த ஹரிஹர விஜய் 22 என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் விசாலாட்சி புரம் பகுதியில் சென்று கொண்டிருந்த நாகூர் ஹனிபாவை வழிமறித்த ஹரிஹர விஜய்யும் கடச்சநேந்தலை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமனும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நாகூர்ஹனிபா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரவிஜய்யை கைது செய்தனர்.


முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல் 2 பேர் கைது.

மதுரை: மதுரை சக்கிமங்கலம் முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயன் மகன் கனகராஜன் 37. இவருக்கும் மதிச்சியம் சூமேக்கர் காலனியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சந்தோஷ் 21 என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சூமேக்கர் காலனியில் சென்றுகொண்டிருந்த கனகராஜனை வழிமறித்த ரமேஷ் மகன் சந்தோஷ், கார்த்திகேயன் மகன் சூர்யா என்ற அழுக்கு சூர்யா இருவரும் சரமாரியாக தாக்கியதாக போலீசில் புகார் செய்தார் .மதிச்சியம்போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை.

மதுரை: மதுரை சிந்தாமணி வினோபாஜி நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி மோகனப்பிரியா 27. இவர் சில தினங்களாக மனக் கவலையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அப்பா நாகராஜ் கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனப்பிரியா சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பாம்பு கடித்து ஒருவர் சாவு போலீஸ் விசாரணை.

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் பாம்பு கடித்து ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் மகாத்மா காந்தி இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குலசேகரன் 41. இவரது வீட்டில் நடந்துசென்றபோது.

இவரை பாம்பு கடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து மனைவி அனிதா கொடுத்த புகாரில் திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கேட்பாரற்றுக் கிடக்கும் இரு சக்கர வாகனங்கள் போலீஸ் விசாரணை.

மதுரை: மதுரை கூடல்புதூர் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சந்தேகப்படும்படியான இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தியிருக்கின்றனர். இந்த வாகனங்களுக்கு உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை கொடுத்து அவற்றை எடுத்துச் செல்ல எவரும் முன்வரவில்லை.

எனவே இதுகுறித்து கூடல்புதூர் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் கொடுத்த புகாரில் கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் குறித்து யாருடையது திருடப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வீடு புகுந்து நகை திருட்டு மர்ம ஆசாமி கைவரிசை.

மதுரை: மதுரை கோச்சடையில் வீடு புகுந்து நகை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர் .

கோச்சடை ஆனந்தம்மாள் தெருவைச் சேர்ந்தவர் கோட்டை அம்மாள் 60. சம்பவத்தன்று அதிகாலை அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்தமூன்றரைபவுன் எடையுள்ள செயின், மோதிரத்தை திருடிச்சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கோட்டையம்மாள் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வீரமரணம் அடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி

290 சென்னை: திருச்சிராப்பள்ளி மாவட்டம் நவல்பட்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பூமிநாதன் அவர்கள் பணியின்போது ஆடு திருடர்களால் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தார். அவரின் குடும்பத்தினருக்கு சென்னை, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452