மதுரை கிரைம்ஸ் 27/05/2021

Admin

முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல் 5 பேர் கைது

மதுரை மே 27 மதுரை விளாத்திகுளம்விளாத்திகுளம் காலாங்கரை முதல் தெருவை சேர்ந்தவர் மோகன் ராஜ் 22 .அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஷுலாதேவன்28 பாண்டியராஜன்19 சுதாகர்20 உள்பட 5 பேர் மோகன்ராஜ் வீட்டு அருகே நின்று சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர். இதை மோகன்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷீலாதேவனும் அவரது நண்பர்களும் சேர்ந்து மோகன்ராஜை கல் மற்றும்கம்பால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மோகன்ராஜ் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷீலாதேவன்,பாண்டியராஜன், சுதாகர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
*********

மதுரை கே புதூரில் வீட்டின் மொட்டை மாடியில் சிகரெட் பிடிக்க சென்றவர் தவறி விழுந்து பலி

மதுரை மே 27 கே புதூர் சிங்காரவேலன் தெருவை சேர்ந்தவர் செல்வம் 47. இவர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது தவறி விழுந்து தலையில் பலமாக அடிபட்டது. ஆபத்தான நிலையில் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கே புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
********

ஜெய்ஹிந்த் புரத்தில் லோடுவேனில் பேட்டரி திருடிய வாலிபர்கள் கைது

கையும் களவுமாக பிடிபட்டனர் மதுரை மே 27 ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மருதுபாண்டி 41 .இவர் வீட்டின் முன்பாக டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.அப்போது நள்ளிரவில் அவரது வேனில் வைத்திருந்த பேட்டரியை இரண்டுபேர் திருடியது தெரியவந்தது. அவர்களை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஜீவாநகர் என்எஸ்கே தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் 27 மற்றும் தங்கபாண்டியன் 24 என்று தெரியவந்தது அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
*********


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை அருகே இளைஞர் கொலை: போலீஸ் எஸ்பி விசாரணை

587 மதுரை:  ஒத்தக்கடை யானை மலை அடிவாரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். அரியலூரை சேர்ந்த மணிவாசகத்தின் வயிற்றை கத்தியால் கிழித்து 4 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!