மதுரை முக்கிய கிரைம்ஸ் 12/04/2021

Admin

கூடல் புதூரில் வீட்டை உடைத்து பணம் வெள்ளி பொருட்கள் கொள்ளை

மதுரை ஏப்ரல் 12 கூடல்புதூர் வீட்டை உடைத்து பணம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கூடல்புதூர் வள்ளுவர் காலனி வ உ சி நகரை சேர்ந்தவர் கோபால் 71. இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 16 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ரூபாய் 32 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கோபால் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


ராஜாஜி பூங்கா அருகே நடந்து சென்ற வாலிபரிடம் கத்திமுனையில் செல்போன் பறிப்பு

மதுரை ஏப்ரல் 12 ராஜாஜி பூங்கா அருகே நடந்து சென்ற வாலிபரிடம் கத்திமுனையில் செல்போன் பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை விளாங்குடி அண்ணா தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஸ்ரீகாந்த்18. இவர் ராஜாஜி பூங்கா அருகே நடந்து சென்ற போது அவரை வழிமறித்த வாலிபர் கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றுவிட்டார். இந்த வழிப்பறி தொடர்பாக ஸ்ரீகாந்த் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்த ஆசாமியை தேடி வருகின்றனர்.


மதுரை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி பலி

மதுரைஏப்ரல்12 மதுரைஅருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தான்.
மதுரை அருகே சக்குடி சாலை தெருவை சேர்ந்தவர் நாகராஜ் மகன் வினோத் 17 .இவன்நண்பர்களுடன் குன்னத்தூரில் உள்ள கிணற்றுக்கு குளிக்கச் சென்றான்.அப்போது துரதிஸ்டவசமாக குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து அப்பாநாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரை அருகே நோய் காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை

மதுரைஏப்1 2மதுரைஅருகே நோய்காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை விராதனூர் சமயமன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி புனிதா 23.இவருக்குமூன்று வருடங்களுக்கு முன்பு ஆபரேசன் செய்து பெண் குழந்தை பிறந்தது. அதன்பின்பு தொடர்ந்து இதய நோய் வந்ததால் மனமுடைந்து காணப்பட்ட புனிதா வீட்டில் தனியாக இருந்தபோது மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதுதொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரை அருகே குடிக்கு அடிமையான வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை ஏப்ரல் 12 மதுரை அருகே குடிக்கு அடிமையான வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை சக்கிமங்கலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வீரா மகன் வெங்கடேஷ் 21.இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அவரால் அந்தப் பழக்கத்தை மறக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த வெங்கடேஷ் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்துசிலைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவில்பட்டி அருகே கண்மாயில் வீசி செல்லப்பட்ட கோவில் கலசம் - போலீசார் விசாரணை

643 தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் இருக்கும் சாலைகுளம் கண்மாயின் ஒரு பகுதியில் சுமார் 2 அடி உயரமுள்ள கோவில் கலசம் ஒரு நீண்ட கம்புடன் இணைக்கப்பட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!