மத்திய காவல் படைகளில் 2221 உதவி ஆய்வாளர் பணிகள்

Admin

மத்திய காவல் படைப்பிரிவுகளில் உதவி-ஆய்வாளர் பணிகளுக்கு 2 ஆயிரத்து 221 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் ஒன்றான ‘ஸ்டாப் செலக்சன் கமிஷன்’ (எஸ்.எஸ்.சி.) அமைப்பு, மத்திய காவலர் படைகளில் குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டெல்லி காவல் மற்றும் மத்திய ஆயுதப்படைப் பிரிவில் ஆய்வாளர் பணியிடங்களையும், சி.ஐ.எஸ்.எப். படைப்பிரிவில் உதவி-ஆய்வாளர் பணியிடங்களையும் நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 221 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள்.

படைப்பிரிவு மற்றும் பணிப்பிரிவு வாரியான பணியிட விவரம் :

டெல்லி போலீசில் உதவி-ஆய்வாளர் (ஆண்கள்) – 616 இடங்கள், உதவி-ஆய்வாளர் (பெண்கள்) – 256, மத்திய ஆயுதப்படை உதவி-ஆய்வாளர் (ஆண்கள்) – 697, உதவி-ஆய்வாளர் (பெண்கள்) – 89, சி.ஐ.எஸ்.எப். படையில் உதவி உதவி-ஆய்வாளர் பணிகள் – 563.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்…

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-1-2017-ந் தேதியில் 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி மையங்களில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

கணினி அடிப்படையிலான தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் பார்ட்-1, பார்ட்-2 என்ற இரு நிலைகளில் சமர்ப்பிக்க வேண்டும். பார்ட் – 1 விண்ணப்பத்தில் விவரங்களை நிரப்பி சமர்ப்பித்த பிறகு, கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் பார்ட்-2 விண்ணப்ப பதிவை தொடங்க வேண்டும். தேவையான இடத்தில் புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

முக்கியத் தேதிகள் :

விண்ணப்பிக்க கடைசி நாள் : 15-5-2017

கட்டணம் செலுத்த கடைசி நாள் : 18-5-2017

கணினி தேர்வு (பேப்பர்-1): 30-6-2017-ந் தேதி முதல் 7-7-2017-ந் தேதி

கணினி தேர்வு (பேப்பர்-2): 8-10-2017

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ssconline.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காஷ்மீரில், பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவ வீரர்கள், காவல்துறையினர் தேடுதல் வேட்டை

212 காஷ்மீரில், காவல்துறையினரை தாக்கி துப்பாக்கிகளை பறிப்பது, வங்கிகளை கொள்ளையடிப்பது என பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. தெற்கு காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452