மறியலில் ஈடுபட முயன்ற இந்திய, மாணவர் சங்கத்தினர் 33 பேர் கைது!

admin1

கடலூர் :   சிதம்பரம், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமையில், மாவட்ட தலைவர் செம்மலர், மாவட்ட துணை செயலாளர் லெனின் உள்ளிட்டவர்கள் நேற்று சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்று ரெயில் மறியல் போராட்டத்தில், ஈடுபட முயன்றனர். ரெயில் நிலையம் அருகே சென்றபோது, அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில்,  ஈடுபட்டிருந்த சிதம்பரம் துணை காவல் சூப்பிரண்டு திரு. ரமேஷ் ராஜ், சேத்தியாத்தோப்பு துணை காவல் சூப்பிரண்டு திரு. சுந்தரம்,  ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர்,  தடுத்து நிறுத்தினர். அப்போது இந்திய மாணவர் சங்கத்தினர், அக்னிபத், திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டு என கோரி கோஷங்களை எழுப்பினர். அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு  கூறினர். இருப்பினும் அவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில்,  ஈடுபட முயன்றனர். இதையடுத்து போராட்டத்தில்,  ஈடுபட முயன்ற 33 பேரை  காவல் துறையினர், , கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஆயுதப்படை மைதானத்தில், காவல் சூப்பிரண்டு!

519 கடலூர் :  கடலூர் மாவட்டத்தில்,  காவல்துறையினர் பயன்படுத்தும் இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களை மாதந்தோறும் காவல் சூப்பிரண்டு திரு. சக்திகணேசன்,  ஆய்வு செய்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452