மாதத்தின் நட்சத்திர காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

Admin
சென்னை : சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக தினசரி வழங்கும் பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் அவர்களது தலைமையிலான குழு ஒவ்வொரு மாதமும் தீவிரமாக ஆராய்ந்து, சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்கவகையிலும் பணி செய்யும் காவல் அதிகாரி அல்லது ஆளிநரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு “மாதத்தின் நட்சத்திர காவலர் விருது” (Police Star of The Month) பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாதமும் நட்சத்திர காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் காவல் அலுவலருக்கு ரூ.5,000 பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
கடல் அலைகளில் அடித்து செல்லப்படும் நபர்களை காப்பாற்ற, மெரினா கடற்கரை பகுதியில், உழைப்பாளர் சிலை பின்புறம் மற்றும் காந்தி சிலை பின்புறமுள்ள 2 இடங்களில் உள்ள மணற்பரப்பில் ‘‘உயிர் காப்பு பிரிவு‘‘ தொடங்கப்பட்டு, மீட்பு மற்றும் உதவி பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் A.அருண் (கா.55804) என்பவர் மெரினா, காந்தி சிலை பின்புறமுள்ள உயிர் காப்பு பிரிவில் பணியிலிருந்த போது, மதியம் சுமார் 12.00 மணியளவில், ஒரு நபர் மெரினா கடலை நோக்கிச் வேகமாக நடந்து சென்று கடலில் இறங்கியதை கண்ட காவலர் அருண் குரல் கொடுத்துக் கொண்டே பாதியளவு கடலில் இறங்கிய நபரை மீட்க கடலில் நீந்திச் சென்று, துரிதமாக செயல்பட்டு, மேற்படி நபரை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தார்.
விசாரணையில் காப்பாற்றப்பட்ட நபர் யோகேஷ் (வ/27) முகப்பேர் என்ற முகவரியில் வசிக்கும் பொறியியல் பட்டதாரி என்பதும், மன விரக்தியில் தற்கொலை செய்வதற்காக கடலில் இறங்கிச் சென்றதும் தெரியவந்தது.
இதன்படி சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் J.லோகநாதன், இ.கா.ப. அவர்களின் தலைமையிலான குழுவினர் சிறப்பாகவும், மெச்சத்தக்க வகையிலும் பணியாற்றிய ஆயுதப்படை-1, “K” நிறுமம், 60 ஆம் அணியைச் சேர்ந்த காவலர் திரு.அருண் (கா.55804) என்பவரை 2021ம் ஆண்டு “டிசம்பர் மாதத்தின் நட்சத்திர காவலர் விருதுக்கு” தேர்வு செய்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் டிசம்பர் மாதத்தின் நட்சத்திர காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் திரு.அருண் என்பவரை 08.01.2022 அன்று மாலை நேரில் அழைத்து மாதத்தின் நட்சத்திர காவலர் விருதுக்குரிய ரூ.5 ஆயிரம் பண வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் J.லோகநாதன், இ.கா.ப, இணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.B.சாமூண்டிஸ்வரி, இ.கா.ப, துணை ஆணையாளர் திரு.பாலாஜி சரவணன், (தலைமையிடம்) காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தர்மபுரி ADSP தலைமையில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு

847 அவர்கள் தலைமையில் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் (ஆண்கள்). சைபர் குற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள், போதைப்பொருள் மற்றும் ஒமைக்ரான் குறித்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452