மாயமான நபர் வெட்டி கொலை, அழுகிய நிலையில் சடலம் மீட்பு

admin1
திருவள்ளூர் :  கும்மிடிப்பூண்டி, மாயமான வாலிபர், காப்பு காட்டில், 10 நாட்களுக்கு முன் வெட்டி கொலை செய்து வீசிய நிலையில், அழுகிய உடலை காவல் துறையினர், கைப்பற்றி கொலையாளிகளை தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டை அடுத்த, நாகராஜபுரம் பகுதியை சேர்ந்த தாத்தாராவ் மகன் தருண்குமார், (20),  ஐ.டி.ஐ., முடித்து தனியார் தொழிற்சாலையில்,  வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம், 23, ம் தேதி மாயமானார்.  ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டை  காவல் துறையினர், வழக்கு பதிந்து தேடி வந்தனர்.  இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த, மாதர்பாக்கம் அருகே, ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள இருங்குளம் காப்பு காட்டில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று, பல இடங்களில் வெட்டு காயங்களுடன், அழுகிய நிலையில்,  நேற்று காணப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பாதிரிவேடு காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். சடமலாக இருந்தவர், மேற்கண்ட தருண்குமார்,  என்பதை, சம்பவ இடத்தில்,  கிடந்த செருப்பு, கை காப்பு, உத்திராட்ச மாலை கொண்டு அவரது பெற்றோர் உறுதி செய்தனர்.  மாயமான வாலிபரை, மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து காப்பு காட்டில் வீசி சென்றது காவல் துறையினர், விசாரணையில் தெரியவந்தது. வழக்கு பதிந்த பாதிரிவேடு காவல் துறையினர், கொலையாளிகள், யார் என்பது குறித்து தீவிர விசாரணை, மேற்கொண்டு வருகின்றனர்.

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்

மற்றும்

திரு. J. தினகரன்

நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா

திருவள்ளூர்

 

 

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கோவையில் புதிய பொறுப்பில், திரு. பாலகிருஷ்ணன்

574 கோவை :  கோவை மாநகர காவல் ஆணையர் திரு .பிரதீப் குமார், மத்திய அரசு பணிக்கு மாறுதல் செய்யப் பட்டுள்ளார். புதிய காவல் ஆணையராக, மத்திய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452