மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

Prakash
திருவாரூர்: திருவாரூர் நகர காவல் சரக பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த சுதாகர் திலகர் பைபாஸ் ரோடு 2-ம் தெரு திருவாரூர் என்ற H.S ரெளடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் தனிப்படை அமைத்து கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரை மற்றும் அதிரடி நடவடிக்கையின்பேரில் குற்றவாளி சுதாகர் இன்று 24.11.21 குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் இதுபோன்று திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீதும்,குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
மேலும் சிறப்பாக பணியாற்றிய திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.

திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சட்டவிரோதமாக மது பாட்டில் கடத்திய இரண்டு நபர்கள் கைது

286  திருவாரூர்:  பாண்டிச்சேரியிலிருந்து திருவாரூர் தாலுக்கா சரக பகுதி வழியாக இன்று (24.11.2021) சட்டவிரோதமாக, பாண்டி மாநில சாராயம் கடத்திய 1. மகேந்திரன் 2. முருகானந்தம் ஆகியோரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452