மீஞ்சூரில் குடிசை எரிந்து சாம்பல், உதவிகள் வழங்கிய M.L.A

Admin

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம்,  மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட  லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த, முனியம்மாள் (40),  கூலி தொழிலாளி நேற்று மதியம் வீட்டில் இருந்தபோது,  திடீரென வீட்டின் கூரையிலிருந்து, புகை வந்தது. உடனடியாக வெளியே சென்ற முனியம்மா,  அருகில் உள்ளவர்கள் உதவியுடன்,  தீயை அணைக்க முயன்ற போது தீ மளமளவென, சுற்றிலும் பரவியது. உடனடியாக பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு,  தகவல் கொடுத்து தீயணைப்புத் துறையினர்,  விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வீட்டிலிருந்த கட்டில், பீரோ,பிரிட்ஜ், துணிமணிகள், பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின,  இதுகுறித்து  மீஞ்சூர் காவல் துறையினர் மின்கசிவா, வெயிலின் தாக்கத்தினால் தீப்பற்றி எரிந்ததா , என விசாரித்து வருகின்றனர்.  தகவலறிந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்,  துரை சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட முனியம்மாவை,  நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உதவிகள் வழங்கினார்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்

மற்றும்

திரு. J. தினகரன்

நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா

திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

செங்கல்பட்டில் ஏ.சி. வெடித்து ஊழியர் படுகாயம்

563 செங்கல்பட்டு :   செங்கல்பட்டு மாவட்டம்,  சிங்கப்பெருமாள் கோவில்,  அருகே உள்ள மகேந்திரா சிட்டி,  பக்தசிங் நகரில், மகேஸ்வரி,  என்பவர் வீட்டிலேயே  சிறிய அளவில்,  ஓட்டல் நடத்தி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452