லிப்ட் கொடுத்து பணம் கேட்டு மிரட்டிய இருவர் கைது

Prakash

சென்னை: சென்னை மணலி, சின்னசேக்காடு, கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் பாதல் பெகரா, 27, ஓட்டலில் வேலை பார்க்கிறார். கடந்த, 8 ம் தேதி, இரவு, 10:30 மணிக்கு, வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிந்தார்

அப்போது, சின்னசேக்காடு ராஜூ தெருவில் சென்றுக் கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், லிப்ட் கொடுப்பது போல, பாதல் பெகராவை, அழைத்து சென்றுள்ளனர்.

பின், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில், இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, பாதல் பெகராவை இறக்கி, கத்தியை காட்டி மிரட்டி, பணம் மற்றும் மொபைல் போன் கேட்டு மிரட்டியுள்ளனர்

அவரிடம் பணம் மற்றும் மொபைல் போன் இல்லாததால், ஆத்திரமடைந்த வாலிபர்கள், கை மற்றும் கத்தியால் அவரை பலமாக தாக்கி விட்டு, தப்பியோடி விட்டனர்.

இது குறித்து, மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த நிலையில், நேற்று காலை, சம்பவத்தில் தொடர்புடைய, ராயபுரத்தைச் சேர்ந்த தபிருல்லா, 26, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், 24, ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, இரு சக்கர வாகனம் மற்றும், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இருவர் மீதும், பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. பின், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றிய காவலர்

288 கடலூர்: கடலூர் மாவட்டம் மருதூர் காவல் நிலைய சரகம் ஜெயகொண்டம் to பு. கொளக்குடி போகும் சாலையில் இன்று மதியம் 12:30 மணிஅளவில் பெரிய தூங்குமூஞ்சி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452