வருமான வரி ஏய்ப்பு செய்த, பெண்ணுக்கு சிறை தண்டணை

admin1

கோவை:  கோவை அருகே உள்ளதெலுங்கு, பாளையத்தைச் சேர்ந்தவர் கவிதா (37),  இவர் சிறுவாணி மெயின் ரோட்டில் பெட்ரோல் பங்க், நடத்தி வருகிறார். கடந்த 2008 – 2009 ஆம் ஆண்டு,  இவர் வருமான வரி தாக்கல் செய்தார். அதில் தனக்கு விவசாயத் தொழில், மூலம் ரூ 6 லட்சம் வருமானம் வந்ததாக, வருமானவரிக் கணக்கில் குறிப்பிட்டிருந்தார். அதை வருமானவரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது,  கவிதா விவசாய தொழில் மூலம் ரூ6 லட்சம், வருமானத்தை ஈட்ட வில்லை, என்பது உறுதியானது.

இதை தொடர்ந்து கவிதா மீது வருமான வரி, ஏய்ப்பு சட்ட விதிகளின்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டது, இந்த வழக்கு கோவை 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்,  நீதிமன்றத்தில் நடந்து வந்தது ,வழக்கை விசாரித்த நீதிபதி, பெட்ரோல் பங்க் அதிபர் கவிதாவுக்கு 3 மாத சிறைத் தண்டனையும்,  ரூ 5 ஆயிரம் அபராதமும், விதித்து தீர்ப்பு கூறினார். வருமான வரித்துறை சார்பில், வழக்கறிஞர் திரு. விஜய குமார், ஆஜராகி வாதாடினார்.

 

கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

முதியவரை கத்தியால், குத்திய வாலிபர் கைது

536 கன்னியாகுமரி :  குமரி மாவட்டம் நாகர்கோவில், ராமவர்மபுரம் பகுதியைச் சேர்ந்த, கிருஷ்ணன் செட்டியார் (71), ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அலுவலர். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (25), […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452