விழுப்புரம் காவல்துறை தலைமையகத்தில் புதிய நூலகம் திறப்பு

Admin

விழுப்புரம்: விழுப்புரத்தில் புகார் அளிக்கவும், காவல்துறை சார்ந்த பல்வேறு நடைமுறைகளுக்காகவும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நாள்தோறும் பெருமளவில் பொதுமக்கள் வருகை தரும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய திறந்தநிலை நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. சிறுகதைகள், அறிவு சார்ந்த புத்தகங்கள், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் போன்றைவை இடம் பெற்றுள்ள இந்நூலகத்தை திறந்து வைத்துப் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார்., அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், தாங்கள் காத்திருக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கவும், இளைய சமுதாயத்தினரிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்நூலகம் திறக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 100 நூல்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பாபர் மசூதி இடிப்பு தினம் முன்னெச்சரிக்கையாக பலத்த காவல் பாதுகாப்பு

95 கடலூர்: இன்று(புதன்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினமாகும். இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452