Read Time1 Minute, 12 Second
சென்னை: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் காகித கூழாக மாற்றப்பட்டு வருகிறது. காகித கூழ் கொண்டு சென்னை புழல் சிறையில் உள்ள சிறைவாசிகள் லெட்டர் பேடு தயாரித்து அரசு அலுவலகங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
புழல் சிறைக்கு 36 டன் காகிதக் கூழ் வந்துள்ளதாகவும் அதன் மூலம் கைதிகள் தயார் செய்யும் லெட்டர் பேடுகள் அரசு அலுவலகங்களுக்கு விற்கபடுவதாக சிறைத்துறை ஐ.ஜி. முருகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த காகித கூழ்களை நாடு முழுவதும் உள்ள சிறைகளுக்கு அனுப்பி சிறைவாசிகளை கொண்டு லெட்டர் பேடு தயாரிக்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.