சிதம்பரம் அம்மன் கோவிலில் மர்ம நபர்கள் கைவரிசை நகை பணம் கொள்ளை

Admin
0 0
Read Time2 Minute, 9 Second

கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளிச்சாவடி கிராமத்தில் மதுரை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதேபகுதியை சேர்ந்த கலியபெருமாள்(70) என்பவர் இருந்து வருகிறார். சம்பவத்தன்று இவர், வழக்கம் போல் பூஜை முடிந்த பிறகு இரவில் கோவிலை பூட்டி சென்றார்.

மறுநாள் காலையில் சென்று பார்த்த போது, கோவிலின் முன்பக்க இரும்பு கேட் கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கலியபெருமாள் கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது அம்மன் கழுத்தில் கிடந்த, 2 கிராம் தங்க செயின், சிறிய வெள்ளி கிரீடம், கோவில் மணி ஆகியன திருடு போய் இருந்தது. மேலும் அங்கிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது.

இரவில் கோவிலின் கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் நகை மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கலியபெருமாள் சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருடு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக் கிறது.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

4 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற IAS, IPS அதிகாரிகள் மாநாடு, காவல்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் பெருமிதம்

48 சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச்செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் மாநாடு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami