59
Read Time1 Minute, 18 Second
மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்பில் கத்திக் குத்துக் காயம் அடைந்த நிலையிலும் நிராயுதபாணியாக 4 ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டு தீவிரவாதிகளத் துரத்தியடித்த அதிரடிப்படை காவலர் பாராட்டை பெற்று வருகிறார்.
கட்சிரோலி ((Gadchiroli)) நகரில் சந்தைப் பகுதி ஒன்றில் அதிரடிப்படைக் காவலரான கோம்ஜி மட்டமி ((Gomji mattami)) என்பவர் பணியில் இருந்தார். அப்போது ஆயுதங்களுடன் அங்கு வந்த 4 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அவரை மார்பில் கத்தியால் குத்தி அவரிடமிருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியையும் தோட்டாக்களையும் பறித்ததாக கூறப்படுகிறது.
மார்பிலிருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் தனியொருவராக அவர்களை துரத்திச் சென்ற மட்டமி அவர்களுடன் தீரத்துடன் போராடி துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மீட்டதோடு அவர்களை துரத்தியடித்தார்.