வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்தவர் கைது

Admin
0 0
Read Time2 Minute, 19 Second

கடலூர்: பரங்கிப்பேட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் அபுபக்கர் (51). இவர் சவுதி அரேபியாவில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது அதே நிறுவனத்தில் பணிபுரியும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷகிர், முஸ்தபா, ரஷாக் ஆகியோருடன் அபுபக்கருக்கு பழக்கம் ஏற்பட்டு நண்பர்களானார்கள். இதனை தொடர்ந்து அபுபக்கர் கடந்த 2013-ம் ஆண்டு பரங்கிப்பேட்டைக்கு வந்து விட்டார். அதன்பிறகு அவர் சவுதிஅரேபியாவிற்கு செல்லவில்லை. இருப்பினும் அங்குள்ள நண்பர்களுடன் அபுபக்கர் செல்போனில் பேசி வந்தார்.

இந்த நிலையில் அபுபக்கரிடம் 3 பேரும், இந்த நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், தங்களுக்கு தெரிந்த நபர்களின் புகைப்படம் மற்றும் ஆவணங்களை அனுப்பி வைக்குமாறும், அதற்காக அந்தந்த நபர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை வசூலித்து தருமாறும் கூறி உள்ளனர்.

அதன்படி அபுபக்கரும், தனக்கு தெரிந்த நண்பர்களிடம் கூறி 8 பேரிடம் மொத்தம் ரூ.4½ லட்சத்தை வசூலித்து வைத்திருந்தார். இது பற்றி 3 பேருக்கும் கூறப்பட்டது. உடனே 3 பேரும் புறப்பட்டு சிதம்பரத்துக்கு வந்தனர். அங்குள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்கி இருந்த அவர்களிடம் அபுபக்கர் ரூ.4½ லட்சத்தை கொடுத்தார். அதன்பிறகு அவர்கள், 8 பேருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை

இது குறித்து அபுபக்கர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஷகிர், முஸ்தபா, ரஷாக் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடலூரில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் கைது

28 கடலூர்: காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் குமரய்யா மற்றும் காவல்துறையினர் கடந்த மாதம் 23-ந்தேதி கருக்கை- செம்மேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள முந்திரிதோப்பில் கருக்கை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami