கடலூரில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் கைது

Admin

கடலூர்: காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் குமரய்யா மற்றும் காவல்துறையினர் கடந்த மாதம் 23-ந்தேதி கருக்கை- செம்மேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள முந்திரிதோப்பில் கருக்கை வடக்கு தெருவை சேர்ந்த ஏழுமலை மனைவி மகா என்கிற மகாலட்சுமி (50) என்பவர் 1,200 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தார்.

இதை அறிந்த காவல்துறையினர் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் மகாலட்சுமியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சாராய வியாபாரியான இவர் மீது காடாம்புலியூர், பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையங்களில் 4 சாராய வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் தண்டபாணி உத்தரவின்பேரில் காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் குமரய்யா தடுப்பு காவல் சட்டத்தில் மகாலட்சுமியை கைது செய்தார். இதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகையையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரம்

55 கடலூர்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாட்கள் சென்னை, புதுச்சேரியில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் புதுச்சேரியில் தங்கி உள்ளார். அவர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452