Read Time1 Minute, 14 Second
தமிழகத்தில் உள்ள 13 மத்திய சிறைகளில் உள்ள கைதிகளை அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது. முதல் முறையாக சிறைக் கைதிகளுக்கு காப்பீடு திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த உள்ளது.
இதன் மூலம் தமிழக சிறைகளில் உள்ள பெரும்பாலான கைதிகளுக்கு பிரதான் மந்திரி சுரக்சா பிமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா ஆகிய இரு மத்திய அரசு காப்பீட்டு திட்டங்களின் பலன் கிடைக்கும்.
இறப்புக் காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் ஊனமுற்றோருக்கான காப்பீடு ஆகியவை இதில் அடங்கும் என்றும் சுமார் 3,600 கைதிகள் அடுத்த 20 நாட்களில் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.