44
Read Time1 Minute, 12 Second
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் 23.11.2018 ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 6119 காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறைக்கான பணி நியமன ஆணைகள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வின் போது மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் முனைவர் திரு.கிரிஜா வைத்தியநாதன் இ.ஆ.ப., அவர்கள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் திரு.நிரஞ்சன் மார்டி இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குனர் திரு.T.K.ராஜேந்திரன் இ.கா.ப., அவர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் திரு.திரிபாதி இ.கா.ப., அவர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.