தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு DGP உயர்திரு.திரிபாதி, IPS அவர்களின் காவல் பயணம்

Admin
0 0
Read Time6 Minute, 31 Second

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக திரிபாதி,IPS அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்பதவியில் இரண்டு வருடங்கள் பணியாற்றுவார்.

ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு பதவியான சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி, திரிபாதி அவர்களுக்கு வழங்கியிருப்பது அவருடைய நேர்மை, பணிவு, பணியில் துணிவு, அனைவருடனும் கனிவுடன் பழகும் குணம் ஆகியவற்றிற்கு கிடைத்த வெகுமதியாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். ஏனேனில் இவர் கடந்த 34 ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக பணியாற்றி, அம்மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். சக காவல் அதிகாரிகளிடம் அதிகார தோரணை இல்லாமல் பழகும் குணமுள்ளவர்.

ஐ.பி.எஸ் பதவி
திரிபாதி அவர்கள் ஒடிசா மாநிலத்தை சார்ந்தவர்.டெல்லி நேரு பல்கலைகழகத்தில் பட்டபடிப்பை முடித்தவர்.பின்னர் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியர் ஆனார். இவர் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவில்,1983 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார். ஆனால் இவர் முதன் முறையாக ஐ.ஐ.எஸ்  க்கு தேர்வானார். அதனை நிராகரித்த அவர், 1985 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானார். அதனையே தொடர முடிவு செய்தார்.

காவல்துறையில் கடந்து வந்த பாதை
பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி பின், டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று, திருச்சி காவல்துறை ஆணையாளராக பொறுப்பேற்ற திரு.திரிபாதி பல நல்ல திட்டங்கள் மற்றும் சட்ட ஒழுங்கை கொண்டு வந்து மக்களிடம் பிரபலமானவர்.குடிசைகளை தத்தேடுப்பது,புகார் பெட்டிகளை வைப்பது, ரவுடிகள் மற்றும் கள்ளசாராயத்தை ஒழித்தது என்று பல நல்ல திட்டங்களை திருச்சியில் அமல்படுத்தினார்.

ரவுடிகளுக்கு சிம்ம சொப்பணம் ஆனார்
பின்னர் தென்சென்னை இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். சென்னையில் நியமிக்கப்பட்டவுடன் ரவுடிகள் பட்டியலை தயார் செய்து, ரவுடிகளின் அதிகாரத்தை ஒடுக்க எண்கவுண்டரை கையில் எடுத்தார்.
பிரபல ரவுடி வீரமணி உள்ளிட்ட முக்கிய ரவுடிகள், தாதாக்கள், எண்கவுண்டர் செய்து மற்ற ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆனார். பின்னர் ஐ.ஜியாக பதவி உயர்வு அடைந்த இவர், மணல் மேடு சங்கரை எண்கவுண்டர் செய்தார். தன் சிறப்பான பணிக்காக சி.பி.சி.ஐ.டி- ஐ.ஜியாக மாற்றப்பட்டார்.

2011-ல் ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்று, சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். ஆனால் இவரது ரவுடிகள் மீதான அடக்கு முறைகளை தொடந்து வந்தார். அப்போது வடமாநில வங்கி கொள்ளையர்கள் 5 பேரை எண்கவுண்டர் செய்து, தமிழக மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.

பின்னர் சிறைதுறை ஏ.டி.ஜி.பியாக நியமிக்கப்பட்ட இவர், சிறைதுறையிலும் இவருடைய சாதனைகள் தொடர்ந்தன. சிறை கைதிகளை தத்தெடுப்பது, சிறை கைதிகளுக்கான பள்ளிகள் மற்றும் அவர்கள் மறுவாழ்விற்கு தொழில்களை ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தினார்.

தனது முப்பது வருட காவல் பணியில் தென்மண்டல ஐ.ஜி, சிபிசிஐடி ஐ.ஜி, பொருளாதார குற்றபிரிவு ஐஜி என்று பல துறைகள் பொறுப்புகளை வகித்துள்ளார்.

பின்னர் சட்டம் ஓழுங்கு ஏ.டி.ஜி.பியாக நியமிக்கப்பட்ட இவர், தமிழ்நாடு சீருடை தேர்வணைய டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றார். அந்நிலையில் தற்போது தமிழக சட்டம் ஓழுங்கு டி.ஜி.பியாக நியமிக்கபட்டுள்ளார்.

விருதுகள்:
திரு.திரிபாதி அவர்களுக்கு இன்னோர் சிறப்பும் உண்டு, அது சர்வதேச அளவில் இரண்டு விருதுகள் பெற்ற முதல் காவல் அதிகாரி என்ற சிறப்புக்கு சொந்தகாரர்.

2001 ல் ஸ்காட்லாந்தை சேர்ந்த பொது நிர்வாகம் மற்றும் நிர்வாகத்திற்க்கான காமன்வெல்த் சங்கம் “Innovation in Governance ” என்ற தலைப்பில் திரு.திரிபாதிக்கு தங்க பதக்கம் வழங்கியது.

108 நாடுகள் பங்கேற்ற, வாஷிங்டன் சர்வதேச காவல்துறை தலைவர்கள் சங்கம் சமூக காவல் விருது வழங்கியது.

2002-ல் மெச்ச தக்க பணிக்காக, இந்திய குடியரசு தலைவர் விருதை பெற்றார்.

2008-ல் சிறந்த நிர்வாகத்திற்காக, பிரதமர் விருதை வாங்கிய முதல் காவல்துறை அதிகாரி என்ற பெயருக்கும் சொந்தகாரர்.

குற்றவாளிகளை ஒடுக்க இரும்பு கரம் கொண்ட இவர், அதே நேரம் திருத்தி வாழ நினைப்பவர்களுக்கு சமூக மாற்றத்தையும், வாழ வழி வகையும் செய்த நல் உள்ளம் கொண்டவர்.

 

டி.ஜி.பி யாக நியமிக்கபட்டிருக்கும் உயர்திரு.திரிபாதி, IPS  அவர்கள் பணி மேன்மேலும் சிறக்க 

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக  வாழ்த்துக்கள்.

☆☆☆☆☆

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குற்றவாளிகளின் வீட்டு செல்ல பிராணியை பராமரித்து வரும் காவல்துறையினரின் ஈர நெஞ்சம்

198 மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோகர் அகிர்வார். இவர் தனது 2 மகன்களுடன் சேர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்துள்ளார். 5 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami