Read Time1 Minute, 7 Second
தூத்துக்குடி: தூத்துக்குடி, முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சதீஷ் நாராயணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சென்னல்பட்டி சேம்பர் பிரிக்ஸ் அருகே தாமிரபரணி ஆற்றுப் படுகையில் மினி லாரியை பயன்படுத்தி நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி, சென்னல்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த மகாராஜன் ஆகிய இருவரும் சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆற்று மணல் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சதீஷ் நாராயணனின் u/s 379 IPC ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மணல் லாரியை பறிமுதல் செய்து மகாராஜனை கைது செய்தார்.