47
Read Time49 Second
புதுக்கோட்டை: புதுக்கோட்டை பாலன்நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் மனு கொடுத்தனர். புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய போலீசார் ராமசந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.