Read Time1 Minute, 15 Second
சென்னை மணலி அருகே 02.08.2019ம் தேதி உள்வட்ட சாலை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் அரை நிர்வாணத்துடன் சாலையில் குறுக்கே அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார் அந்த வாலிபரின் செயலால் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் திரு.சோபிதாஸ் அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திரு.நாகராஜ் ,திரு.அழகேசன், திரு.டேவிட் பொன்குமார் மற்றும் காவலர்கள் திரு,மனோகரன், திரு.ஜெயராஜ், திரு.லோகேஷ் ஆகியோர்கள் பாதிக்கப்பட்ட வாலிபரை மீட்டு குளிக்க வைத்து அவருக்கு புத்தாடை அணிவித்து உண்ண உணவளித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர் . இந்த மனிதாபிமான செயலை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினரை பாராட்டினர். மேலும் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.