Read Time1 Minute, 12 Second
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் காணாமல் போன செல்போன்கள் குறித்த புகார்கள் காவல்துறை மூலம் பெறப்பட்டு திண்டுக்கல் மாவட்ட CYBER CRIME போலீசாருக்கு அனுப்பப்பட்டது. SI திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் Gr.1- 1821 திரு.ராஜசேகர் மற்றும் காவலர்-718 திரு.மணிகண்டன் ஆகியோர் கொண்ட CYBER CRIME போலீசார் காணாமல் போன செல்போன்களை கணினி உதவி மூலம் கண்டுபிடித்து கொடுத்தனர். கண்டுபிடிக்கப்பட்ட 45 செல்போன்களும் 09.08.19 வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் செல்போன் உரிமையாளர்களை அழைத்து செல்போன்களை ஒப்படைத்தார். செல்போனை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர்.