திருடனுக்கு 7 வருடம் தண்டனை பெற்று தந்த நெல்லை காவல்துறையினர்

Admin

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட,  அகஸ்தியர்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் அகஸ்தியர்பட்டியில் கேப்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி காலை தென்காசி மெயின் ரோட்டில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அந்த வழியே பைக்கில் வந்த பேட்டை பகுதியை சேர்ந்த பாஸ்கர்(31), மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிவா என்ற சிவராமலிங்கம்(30) இருவரும் செல்லபாண்டியிடம் வழி கேட்பதாக கூறி அவரிடம் உள்ள ஆறு பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இது குறித்து செல்லப்பாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் அம்பை போலீசார் சிவா மற்றும் பாஸ்கரை கைது செய்தனர்.  இவ்வழக்கு அம்பை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் இருவருக்கும் ஏழு ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவையில் ‘நோ ஹெல்மட் நோ என்ட்ரி’, காவல்துறையினர் அசத்தல்

11 கோவை: விபத்தில்லா தமிழகமாக மாற்ற தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் காவல்துறை தலைவர் திரு. […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami