பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய விழுப்புரம் SP திரு. ஜெயக்குமார் அவர்கள்

Admin

விழுப்புரம்: மாவட்டம் இன்று 27.08.19-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கிளியனூர் மற்றும் கோட்டகுப்பம் காவல் நிலையங்கள் சார்பாக அரசு பள்ளிகளில் நிறுவப்பட்ட நூலகங்களை மாணவர்கள் பயன்பாட்டிற்க்காக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc (Agri) அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது புத்தகங்கள் படிக்க படிக்க அறிவு வளரும், அறிவு வளர்ந்தால் பரந்த மனப்பான்மை ஏற்படும் அதன்மூலம் குற்றச்செயல்கள் குறையும் எனவும், ஒரு நூலகத்தை திறந்தால் நூறு சிறைச்சாலைகள் மூடிவிடலாம் எனவும் அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான் அதிக சதவிகிதத்தில் உயர் பதவியில் இருப்பதாகவும் நானே அரசு பள்ளியில் படித்தேன் என்று கூறியபோது மாணவர்கள் பலத்த கைதட்டல் மூலம் மகிழ்ச்சியை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. அஜய்தங்கம் மற்றும்  பள்ளி தலைமையாசிரியர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் வழிப்பறியில் ஈடுப்பட்ட நபர்களை காவல்துறையினர் துரிதமாக கைது செய்தனர்

22 மதுரை: மாவட்டம்  27.08.19 மேலவளவு காவல் நிலைய எல்கையில் உள்ள கருப்புகோவில் அருகே அரிட்டாபட்டியைச் சேர்ந்த பௌர்ணமி கண்ணன்(27) என்ற நபரிடமிருந்து ரூ.1,50,000/-மதிப்புள்ள YAMAHA BIKE, GOLD […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami