175
Read Time1 Minute, 20 Second
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகல்நகர், பாரதிபுரம் சந்திப்பு அருகே இன்று 28.08.19 குற்றச் செயல்களை தடுக்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு உதவும் வகையிலும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
இன்று 28.8.2019 புதன்கிழமை திண்டுக்கல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.சரவணன் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு புறக்காவல் நிலையம் செயல்படும் விதம் குறித்து மாணவர்களுக்கு கூறினார்கள். எனவே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவையென்றால் புறக் காவல்நிலை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.