Read Time1 Minute, 7 Second
சென்னை: கால் டாக்சி நிறுவனங்கள் ஓட்டுநர்களை பணியில் நியமிக்கும் போது காவலர்கள் சான்றிதழ் பெற வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரிடம் நன்னடத்தை சான்றிதழ் பெற்ற பிறகே ஓட்டுநரை பணியில் சேர்க்க வேண்டும்.
இரவில் பெண்கள் கால் டாக்சியில் பயணம் செய்தால் வேறு சில பெண் பயணிகளும் சேர்ந்து பயணம் செய்வது நல்லது.
மேலும் கால் டாக்சி நிறுவனங்கள் டாக்சியில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கால் டாக்சி ஓட்டுனர்கள் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது அந்நியர்களை ஏற்றிச் செல்லக்கூடாது எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.