கொலைக் குற்றவாளிகள் 5 பேர்- குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

Admin
Read Time2 Minute, 47 Second

தூத்துக்குடி : தூத்துக்குடி , பாளையங்கோட்டை கே.டி.சி நகரைச் சேர்ந்த பச்சை கண்ணன் மகன் சிவக்குமார்(41) என்பவர் கடந்த 21.08.2019 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் கோரம்பள்ளம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ராஜேஷ் @ ராஜேஸ்வரன்(29), கோரம்பள்ளம் பி.எஸ்.பி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் சேசுபாலன் மகன் பீட்டர் @ அந்தோணி பீட்டர்(24), பேரூரணி, மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் மருதவேல் என்ற பப்படை(27), தூத்துக்குடி, அண்ணா நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் பெத்துராஜ் மகன் விக்கி @ விக்னேஸ்வரன் @ விக்னேஷ்குமார்(30) மற்றும் குலையன்கரிசல் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பட்டு லிங்கம் மகன் சத்யராஜ்(25) ஆகிய 5 பேர் உட்பட 14 பேரை தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார். 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

மேலே பெயர் குறிப்பிட்டுள்ள 5 எதிரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி டி.எஸ்.பி அவர்கள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் பரிந்துரையின் பேரில் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் மேற்படி எதிரிகள் ராஜேஷ் @ ராஜேஸ்வரன், பீட்டர் @ அந்தோணி பீட்டர், மருதவேல் @ பப்படை, விக்கி @ விக்னேஷ்வரன் சத்யராஜ் ஆகிய 5 பேரையும் இன்று (21.09.2019) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பதக்கங்களை வென்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு

11 சென்னை:  காவல்துறை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார் . சீனாவில் 77 நாடுகளின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami