சென்னையில் பள்ளமாக இருந்த சாலைகளை சீர்மைத்த உதவி ஆய்வாளருக்கு காவல் ஆணையர் பாராட்டு

Charles
0 0
Read Time1 Minute, 52 Second

சென்னை: V-5 திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் திரு.ஆர்.அருணன் (22.09.2019) அன்று திருமங்கலம், எஸ்டேட் ரோடு பகுதியில் பணியிலிருந்த போது, அங்கு சாலையிலிருந்த 1 ½ அடி பள்ளத்தில், அந்த வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் கீழே விழுந்து சிரமத்திற்குள்ளாயினர். சாலையில் கிடந்த பள்த்தால் வாகன ஓட்டிகள் சிரமமடைவதை கவனித்த, போக்குவரத்து உதவி ஆய்வளார் திரு.ஆர்.அருணன் அவர்கள் சிறிதும் தாமதிக்காமல் தனது சொந்த செலவில் அருகிலுள்ள கடையிலிருந்து சிமெண்ட் மற்றும் ஜல்லிக்கற்களை வாங்கி, அதனை கலவையாக தயார் செய்து தானே பள்ளத்தை நிரப்பி சரி செய்துள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் சிரமமின்றி பயணம் செய்துள்ளனர். மேலும் அவ்வழியே வாகனங்களில் சென்ற பொதுமக்கள் போக்குவரத்து உதவி ஆய்வாளரின் பணியை பெரிதும் பாராட்டியுள்ளனர். திருமங்கலம் பகுதியில் சாலையிலிருந்த பள்ளத்தை சீரமைத்து போக்குவரத்து சீராக செல்வதற்கு உதவி புரிந்த உதவி ஆய்வாளர் திரு.ஆர்.அருணனை (23.09.2019) அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

About Post Author

Charles

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னையில் மாணவர்களிடையே தவறான வழிகளின் விளைவுகள் குறித்து அறிவுரை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

32 சென்னை: இரயில்களில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் தகாத வழிகளில் செல்வதைத் தடுக்கும் பொருட்டு கல்லூரி மாணவர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் 14.09.2019-ம் தேதியன்று சென்னை சென்ட்ரல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami