திருநெல்வேலி காவல்துறையின் சார்பாக  “வேர்களைத் தேடி”  அமைப்பு துவக்கம்

Admin
0 0
Read Time2 Minute, 30 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறையின் சார்பாக  அக்டோபர் 1 – உலக மூத்தகுடிமக்கள் தினமான நேற்று “வேர்களைத் தேடி” என்ற மூத்த குடிமக்கள் பாதுகாப்பு திட்டம் மாநகர காவல் ஆணையரால் துவக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு ) திரு.பிரவீன்குமார் அபினபு, lPS, காவல் துணை ஆணையர் திரு.மகேஷ்குமார் IPS , காவல் துணை ஆணையர், திரு.சரவணன், சட்டம் & ஒழுங்கு மற்றும் காவல் அதிகாரிகள் , அனைத்து பகுதிகளிலிருந்து வந்திருந்த மூத்த குடிமக்கள் கலந்து கொண்டனர்.

வேர்களைத் தேடி திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :-

🔸 நெல்லை மாநகரில் தனியாக வாழும் மூத்த குடிமக்களை குறிவைத்து நடைபெறும் குற்றசம்பவங்களை தடுக்கவும், நூதன மோசடிகளிலுருந்து காக்கவும் அறிமுகம் செய்யப்பட்டதே “வேர்களைத் தேடி” திட்டம் .

🔸ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் வீடுகளில் “வேர்களைத் தேடி” பட்டா புத்தகம் வைக்கப்படும் .

🔸குறிப்பிட்ட கால் இடைவெளிகளில் ( வாரமொருமுறை) பீட் காவலர்கள் தணிக்கை செய்து குற்றத்தடுப்பு ஆலோசனை வழங்குவர் . அவர்களது செல்போனில் Kavalan SOS App download செய்தும் , Speed dialல் காவல் கட்டுபாட்டு அறை எண் பதிந்தும் தரப்படும்.

🔸 பட்டா புத்தகத்தில் காவல் நிலைய தொலைபேசி எண் , காவல் கட்டுப்பாட்டு அறை எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும் .

🔸நெல்லையில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் இந்த வசதியை பெற 0462-2562651, 9498181200 மற்றும் 7449100100 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் .

🔸இத்திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்த படும் என்று நம்புவதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு உணவு வழங்கிய காவல்துறையினர்

143 மதுரை மாவட்டம்: சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் சார்பில் உணவு வழங்கப்பட்டது. முதியோர்களை மதிப்போம் முதியோர் நலன் காப்போம் முதியோர்களுடன் நமது வாழ்வை மகிழ்ந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami