சிவகங்கை மாவட்டம்: தேவகோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடுங் குளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன்(32) என்பவர் 30.05.2015 அன்று அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தேவகோட்டை மகளிர் காவல் நிலைய போலீசார் *u/s 5(k) 6 of Pocso- Act ன் கீழ்* வேல்முருகன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.இது தொடர்பாக விசாரணை மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 01.10.2019-ம் தேதி அன்று உயர்திரு நீதிபதி திரு. செம்மல் அவர்கள் மேற்படி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1,000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இழப்பீடாக ரூபாய் 6 லட்சத்தை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி பெற்றுத் தந்த காவல்துறைக்கு மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
சிவகங்கையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்தண்டனை

Read Time1 Minute, 33 Second