லலிதா நகைகடை கொள்ளையனை பிடித்த திருவாரூர் காவல்துறையினருக்கு ஐ.ஜி பாராட்டு

Admin

திருவாரூர்: திருவாரூர் நகர காவல் நிலைய விளமல் பகுதியில் 03-10-2019 ம் தேதி இரவு திருவாரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாரதநேரு அவர்கள் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.சுப்ரமணியன், திரு.இளங்கோ, தலைமை காவலர்கள் திரு.காமராஜ், திரு.ரவி, முதல் நிலை காவலர் திரு.சுந்திரராமன், காவலர் திரு.ரகுவரன் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் வாகன தணிக்கை செய்த போது சந்தேக நபரை பிடித்து விசாரித்து சமீபத்தில் திருச்சி மாநகரில் லலிதா நகை கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவ வழக்கை கண்டுபிடிக்க சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V. வரதராஜூ,IPS, தஞ்சாவூர் சரக காவல் துறை துணை தலைவர் முனைவர் திரு. J. லோகநாதன் , IPS மற்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.S. மகேஸ்வரன் ஆகியோர் பாராட்டி வெகுமதியும் நற்சான்றிதழ்களும் நேற்று வழங்கினார்கள்.

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நமது குடியுரிமை நிருபர்


S. வீரமணி
குடியுரிமை நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்து அமர்க்களப்படுத்திய அம்பை துணை காவல் கண்காணிப்பாளர்

125 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் 05.10.2019  அம்பை உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி மற்றும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் இணைந்து கல்லிடைக்குறிச்சி […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami