கன்னியாகுமரி மாவட்டம்: கொல்லங்கோடு, நித்திரைவிளை, புதுக்கடை, உள்ளிட்ட பல பகுதிகளில் சில நாட்களாக மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது, குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. N.ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அந்தோணியம்மாள் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. ஜான் போஸ்கோ மற்றும் காவலர்கள் சகிதம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகபடும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் இருவரும் கேரளமாநிலம் பூந்துறையை சேர்ந்த சாஜன்(26), மற்றும் ரோய்(23) என்பதும் இவர்கள் பல பகுதிகளில் பல பெண்களிடம் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. விசாரணையில் இவர்கள் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது. உடனே அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில்அடைத்தார். அவர்களிடமிருந்து 38 பவுன் தங்க நகைகள் கைப்பற்றபட்டது.
கன்னியாகுமரியில் தொடர் செயின் மற்றும் வாகனங்கள் திருட்டில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது

Read Time1 Minute, 39 Second