Read Time1 Minute, 15 Second
இராமநாதபுரம்: கடந்த 22.08.2015-ம் தேதி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை, சாத்தையா 52/19, த/பெ முருகன் என்பவர் பாலியல் கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்: 14/15 u/s 6 & 12 of POCSO Act and 506(ii) IPC-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
நேற்று 04.10.2019, இவ்வழக்கின் விசாரணை முடிந்து மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.பகவதி அம்மாள் அவர்கள், மேற்படி குற்றவாளி சாத்தையா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆயுள் தண்டனை மற்றும் 3,000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்கள்.