இராமநாதபுரத்தில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Admin

இராமநாதபுரம்: இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 22.08.2015-ம் தேதி 11 வயது சிறுமி ஒருவரை, சாத்தையா 52/19, த/பெ முருகன் என்பவர் பாலியல் கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்  பேரில் இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்: 14/15 u/s 6 & 12 of POCSO Act and 506(ii) IPC-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

04.10.2019-ம் தேதி, இவ்வழக்கின் விசாரணை முடிந்து மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.பகவதி அம்மாள் அவர்கள், மேற்படி குற்றவாளி சாத்தையா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆயுள் தண்டனை மற்றும் 3,000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேலூரில் காவல் நிலையங்களை சுத்தம் செய்த காவலர்கள்

75 வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் ஐபிஎஸ்., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்கள் சுத்தம் செய்யப்பட்டு பசுமையாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452