தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

Admin

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்.ஜி.ஓ காலனியில் வசிப்பவர் ஸ்டீபன்தனபால் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றதை அறிந்த மர்ம கும்பல் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகையை கொள்ளையடித்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த லீலா என்பவரின் வீட்டிலும் தொடர் கொள்ளை சம்பவம் 25.06.2018 அன்று நடந்துள்ளது.

இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட தவமணி, காளிமுத்து, விஜய், குரு, பூவலிங்கம், கணேசன், மாலிக் சோஹைல் ஆகிய 7 பேர் மீது u/s 392,394-IPC-ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து23.09.2019 அன்று சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 43 பவுன் நகை மற்றும் ரூபாய் ஒரு லட்சம் பணத்தை காரைக்குடி DSP அருண் அவர்கள் 11.10.2019 அன்று உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கையில் திருட்டில் ஈடுபட்ட முதியவர் கைது

33 சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கௌரி பட்டியை சேர்ந்த கண்ணப்பன்(88) என்பவர் சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ATM -ல் பணத்தை எடுத்து கைப் பையில் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami