Read Time1 Minute, 0 Second
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தென்காசி காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் 1910 திரு.பிரபாகரன் அவர்கள் குற்றாலம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு உணவளித்து அவர் பசியைப் போக்கியுள்ளார். தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதியில் சுற்றித் திரியக்கூடிய மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி இதுபோன்ற உணவுப் பொட்டலங்களை தன் சொந்த முயற்சியால் வாங்கி அவர்களின் பசியை போக்கி, மனிதாபிமானத்தோடு செயல்பட்டு வருகிறார் . அவருடைய இதுபோன்ற செயல் தமிழ்நாடு காவல்துறையை பெருமை அடையச் செய்கிறது . தொடரட்டும் உங்கள் சமூக காவல் பணிகள்.