‌பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது 59 பவுன் நகை மீட்பு.

Admin
1 0
Read Time1 Minute, 44 Second

ஈரோடு:  ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட எஸ்பி திரு. சக்தி கணேசன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பெயரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா புத்தூர் சுரட்டை பாளையத்தைச் சேர்ந்த வீரமணி (26) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டி வலசு நாயக்கர் தெரு காமராஜ் (26) திருச்செங்கோடு இறையமங்கலம் காட்டு வேலம்பாளையம் நாயக்கர் தெருவைச் சேர்ந்த முரட்டுக்காளை (40) அதே பகுதியைச் சேர்ந்த விஜி (21) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் வீரமணி, காமராஜ் ஆகியோர் மீது ஈ‌‌ரோடு அரசு ஆஸ்பத்திரி, ஈரோடு டவுன், கருங்கல்பாளையம், சூரம்பட்டி, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதேபோல் தங்கராஜ், விஜி ஆகியோர் மீது தாலுகா காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் வடக்கு காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு உள்ளது. இவரிடமிருந்து 59 பவுன் நகையை போலீசார் மீட்டு, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காஞ்சிபுரத்தில் காவலர் வீரவணக்க நாள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விததாக மினி மாரத்தான்

204 காஞ்சிபுரம் : அக்டோபர் 21 காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் மினி மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. இத்தொடர் ஓட்டத்தின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami