காஞ்சிபுரத்தில் காவலர் வீரவணக்க நாள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விததாக மினி மாரத்தான்

Admin

காஞ்சிபுரம் : அக்டோபர் 21 காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் மினி மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. இத்தொடர் ஓட்டத்தின் ஏற்பாடுகளை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாலச்சந்திரன் அவர்களும், காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன் அவர்களும் செய்திருந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் இந்த தொடர் ஓட்டத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர் ஓட்டத்தில் காவல்துறையினர், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், தடகள விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மைதானத்தில் துவங்கிய இத்தொடர் ஓட்டம் மேட்டு தெரு, மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம் வழியாக சுமார் ஆறு கிலோமீட்டர் அளவில் அமைந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அன்று பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வீரமரணமடைந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்களின் வீரவணக்க உரை

39 தூத்துக்குடி:  பணியில் இருக்கும்போது தங்கள் இன்னுயிர் நீத்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு அவர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami