60
Read Time1 Minute, 3 Second
கன்னியாகுமரி மாவட்டம்: வடசேரி பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர் (33). இவர் மீது வடசேரி மற்றும் கோட்டார் காவல் நிலையங்களில் போதை ஊசி விற்பனை மற்றும் போதை வஸ்துக்கள் விற்றது தொடர்பாக பல வழக்குகள் உள்ளன. போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதை தொடர்ந்து அலெக்ஸ்சாண்டரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *Dr. N.ஸ்ரீநாத் IPS* அவர்கள் மாவட்ட ஆட்சியர் *திரு.பிரசாந்த் வடநெரே IAS* அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி அலெக்ஸ்சாண்டர் கோட்டார் போலீசாரால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.