கரூரில் அடையாளம் தெரியாத நபர் விபத்தில் இறந்தவர்க்கு முதல் நிலை காவலர் அவர்கள் நல்லடக்கம் செய்தார்

Charles

கரூர் மாவட்டம்: திருச்சி to கரூர் மெயின் ரோட்டில் சிந்தலவாடி பழைய மணல் ரீச் அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 55 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உடல்முழுவதும் சிதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த லாலாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் பிரேதத்தை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு மட்டுமல்லாமல் லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முதல் நிலை காவலர் திரு. குணசேகரன் அவர்களை நியமித்து வாகன விபத்தில் இறந்த அடையாளம் தெரியாத ஆண் பிரேதத்தை குளித்தலை காவிரி ஆற்று சுடுகாட்டில் காவல் துறை சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குற்ற சம்பவங்கள் மற்றும் திருட்டு சம்பவத்தை தடுக்க புறக்காவல் நிலையம் அமைத்த ஆலங்குளம் போலீசார்

54 திருநெல்வேலி: ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆலங்குளம் காமராஜர் சிலைக்கு அருகில், திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் சாலை விபத்து, போக்குவரத்து இடையூறு மற்றும் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami