141
Read Time56 Second
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர், இளைஞரை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தெற்குதெருவை சேர்ந்த இளைஞர் அருண்பிரசாத் என்பவரும், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றும் கண்ணகி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் இரு தரப்பினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரு தரப்பினரும் சமாதானம் அடைந்ததையடுத்து, பெண் காவலர் வீடு திரும்பினார்.